ADDED : ஜன 16, 2025 12:49 AM
சென்னை, பெருங்குடி மண்டலம் -14, வார்டு -186க்கு உட்பட்ட புழுதிவாக்கத்தில், பாலாஜி நகர் 18வது தெருவும், 24வது தெருவும் இணையும் பகுதியில், குடியிருப்புகள் அதிகமுள்ளன.
இதன் அருகில், தனியார் மேல்நிலைப்பள்ளி, திறக்கப்படாமல் உள்ள எம்.ஆர்.டி.எஸ்., புழுதிவாக்கம் ரயில் நிலையம், சிறுவர் பூங்கா உள்ளன.
இங்கு, பணிகள் நிறைவுற்று ஆறு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள ரயில்நிலையத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது.
இரவு நேரத்தில் இப்பகுதியை பெண்கள் மற்றும் வயதானோர் அச்சத்துடன் கடக்கின்றனர். பாலாஜி நகர் விரிவு பகுதி 18வது தெருவில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
பள்ளி ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த முக்கியமான பகுதியில், சமூக விரோத செயல்கள் மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க கேமரா அமைக்க, சென்னை மாநகர போக்குவரத்து ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோபிநாத், பாலாஜிநகர்.

