/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி இரண்டு பாலங்களின் மீது மின் விளக்கு அமைக்கப்படுமா?
/
புகார் பெட்டி இரண்டு பாலங்களின் மீது மின் விளக்கு அமைக்கப்படுமா?
புகார் பெட்டி இரண்டு பாலங்களின் மீது மின் விளக்கு அமைக்கப்படுமா?
புகார் பெட்டி இரண்டு பாலங்களின் மீது மின் விளக்கு அமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 10, 2025 12:24 AM

குன்றத்துார் ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், குன்றத்துார் அருகே செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் பகுதியிலும், குன்றத்துார் - -பல்லாவரம் நெடுஞ்சாலையில், குன்றத்துார் அருகே அடையாறு கால்வாய் செல்லும் பகுதியிலும், மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த பாலங்களின் வழியே, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த இரண்டு மேம்பாலங்களின் மீதும் மின் கம்பம் அமைக்கவில்லை. இதனால், இரவு நேரத்தில், பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
அதனால், இரவு நேரத்தில், இந்த பாலத்தின் மீது நடந்து செல்வோரிடம் மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். எனவே, பாலத்தின் மீது மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.