/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரணிபுத்துார் கோவில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
/
பரணிபுத்துார் கோவில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
பரணிபுத்துார் கோவில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
பரணிபுத்துார் கோவில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
ADDED : பிப் 21, 2024 02:28 AM

குன்றத்துார்'குன்றத்துார் அருகே உள்ள பரணிபுத்துாரில், 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தீர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், கோவிலுக்கு சொந்தமான பிரம்ம தீர்த்தகுளம் உள்ளது.
இந்த குளத்தின், 60 சதவீதம் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், குளத்தின் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது.
மேலும், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்தும், ஆகாய தாமரை செடிகள் வளர்ந்தும் குளம் மாசடைந்து வருகிறது.
எனவே, இந்த குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் குளத்தை துார்வாரி, சுற்றிலும் நடைபாதை அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.