/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று, நாளை கனமழை விமானங்கள் தாமதமாகும்?
/
இன்று, நாளை கனமழை விமானங்கள் தாமதமாகும்?
ADDED : நவ 29, 2024 12:28 AM
சென்னை,
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், இன்றும் நாளையும், கன முதல் மிக கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை விமான நிலையத்தில், நேற்று விமான நிலைய உயர் அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள் உயர்மட்ட கூட்டம் நடந்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, விமான இயக்கம் குறித்து, விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டது.
கனமழை நேரத்தில் பயணியருக்கு உடனடியாக அறிவிப்பு வழங்குதல், மாற்றங்கள் இருந்தால், உடனடியாக தெரியப்படுத்துதல் குறித்து அறிவுறுத்தி உள்ளோம்.
விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்கள் இருப்பின், அதை கையாள்வது குறித்து நிபுணர்களுடன், ஆலோசனை நடத்தியுள்ளோம். விமான சேவையை பொறுத்தவரை தாமதம் ஏற்படலாம். ரத்து இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.
பயணியர் முன்பதிவு செய்த விமான நிறுவன இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஏ.ஏ.ஐ., சென்னை சமூக வலைதளத்திலும் அவ்வப்போது தகவல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

