/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சோழிங்கநல்லுார் தாலுகா இரண்டாக பிரிக்கப்படுமா?
/
சோழிங்கநல்லுார் தாலுகா இரண்டாக பிரிக்கப்படுமா?
ADDED : மார் 20, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, இது குறித்து, சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நேற்று முன்தினம் சட்டசபையில் பேசியதாவது:
சோழிங்கநல்லுார் பெரிய தொகுதியாக உள்ளதால், பொதுமக்கள் வருவாய் சார்ந்த சான்றிதழ் பெற மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதனால், சோழிங்கநல்லுார் தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். பட்டா வழங்குவதில் உள்ள குளறுபடிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு, வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ''தாலுகாவை பிரிக்கும் அவசியத்தை அரசு உணர்ந்துள்ளது. போதிய நிதி ஒதுக்கி, தாலுகாவை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.