/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் மாற்றிகளால் விபத்து அபாயம் வாரியம் விழித்துக்கொள்ளுமா
/
மின் மாற்றிகளால் விபத்து அபாயம் வாரியம் விழித்துக்கொள்ளுமா
மின் மாற்றிகளால் விபத்து அபாயம் வாரியம் விழித்துக்கொள்ளுமா
மின் மாற்றிகளால் விபத்து அபாயம் வாரியம் விழித்துக்கொள்ளுமா
ADDED : செப் 26, 2024 12:17 AM

மின் மாற்றிகளால் விபத்து அபாயம் வாரியம் விழித்துக்கொள்ளுமா?
திருவொற்றியூர், விம்கோ நகர் - சுங்கச்சாவடி சந்திப்பு வரையிலான, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, 5 கி.மீ., துாரம் உள்ளது. இந்த நெடுஞ்சாலையோரம், பல இடங்களில் மின்மாற்றிகள் உள்ளன. மின் மாற்றியை சுற்றிலும் சில இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வாகனங்கள் உரசாதபடி, இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு சில இடங்களில், தடுப்புகளும் இல்லை; வேலிகளும் இல்லை.
இதன் காரணமாக, மாநகர பஸ்களில் கூட்டம் காரணமாக படியில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் சிலர், மின்மாற்றியின் தடுப்புகளில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதே போல், சில இடங்களில் மின்மாற்றியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள, கான்கிரீட் தடுப்புகளால் சாலை குறுகலாகி, பாதசாரிகள் நடந்து செல்ல வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- பாலாஜி,
விம்கோ நகர்.