ADDED : ஜன 04, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கார சென்னையின் ஒரு பகுதியாக மேம்பாலங்களில் தொங்கும் தோட்டம் போல் பூத்து குலுங்கும் வகையில் செடிகள் வைக்கப்பட்டன.
மத்திய மற்றும் தென் சென்னையில் வைக்கப்படும் இத்தகைய மேம்பால பூங்காக்களில் செடிகள் பராமரிப்பு நேர்த்தியாக உள்ள நிலையில், வடசென்னையில் மட்டும், செடிகள் காய்ந்து சருகாகிவிட்டன. பெரம்பூர் முரசொலிமாறன் பூங்கா அருகே உள்ள மேம்பாலத்தின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள தொங்கு தொட்டிகளில், ஒன்றில் கூட செடிகளோ, கொடிகளோ இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. மாநகராட்சியினர் இவற்றை சீரமைக்க வேண்டும்.
- தினேஷ், பெரம்பூர்.