/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.ஓ.சி., பஸ் நிலையம் மேம்படுத்தப்படுமா? 25 ஆண்டுகளாக பயணியர் காத்திருப்பு
/
ஐ.ஓ.சி., பஸ் நிலையம் மேம்படுத்தப்படுமா? 25 ஆண்டுகளாக பயணியர் காத்திருப்பு
ஐ.ஓ.சி., பஸ் நிலையம் மேம்படுத்தப்படுமா? 25 ஆண்டுகளாக பயணியர் காத்திருப்பு
ஐ.ஓ.சி., பஸ் நிலையம் மேம்படுத்தப்படுமா? 25 ஆண்டுகளாக பயணியர் காத்திருப்பு
ADDED : ஆக 18, 2025 03:09 AM

சென்னை,:தண்டையார்பேட்டையில், காலி மைதானத்தில் எந்த அடிப்படை வசதிகளின்றியும் 25 ஆண்டுகளாக இயங்கும், ஐ.ஓ.சி., பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
தண்டையார்பேட்டை, எண்ணுார் விரைவு சாலையில், கடந்த 2000ம் ஆண்டு முதல் ஐ.ஓ,சி., பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.
இங்கிருந்து, '44, 44 கட் சர்வீஸ், 44சி' ஆகிய வழித்தடங்களுக்கு, தினமும் 16 சர்வீஸ்கள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
காலி மைதானத்தில், செயல்பட்டு வரும் இந்த பேருந்து நிலையத்தில், மேற்கூரை, கழிப்பறை, ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஓய்வறைகள், என, எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இதனால், பயணியரும், போக்குவரத்து ஊழியர்களும் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
தண்டையார்பேட்டை, ஐ.ஓ.சி., பஸ் நிலையம், எந்த வசதியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக காலி மைதானத்தில் இயங்கி வருகிறது. மழை வெயிலில் பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அதேபோல, இப்பகுதி மக்கள் அம்பத்துார், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில், வேலை செய்து வருகின்றனர்.
ஆனால், ஐ.ஓ.சி.யில் இருந்து அம்பத்துார், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், ஐ.ஓ.சி., பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே சென்று, அங்கிருந்து அம்பத்துார், கிண்டிக்கு மற்றொரு பேருந்தில் பயணம் செய்யும் சூழ்நிலை இருந்து வருகிறது.
எனவே, இங்கிருந்து கிண்டிக்கு பேருந்து இயக்கினால், பயண நேரம் குறைந்து பயணியர் பயன்பெறுவர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆவன செய்ய வேண்டும்.
மேலும், பஸ் நிலைய வளாகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.