/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம் சுமூக முடிவு எட்டுமா?
/
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம் சுமூக முடிவு எட்டுமா?
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம் சுமூக முடிவு எட்டுமா?
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம் சுமூக முடிவு எட்டுமா?
ADDED : அக் 01, 2025 03:28 PM
திருவொற்றியூர்:
மருத்துவ காப்பீடு முன்பணத் தொகைக்கோரி, 18 நாளாக எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம் தொடரும் நிலையில், இன்று நடக்க உள்ள முத்தரப்பு பேச்சில், சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவொற்றியூர், விம்கோ நகரில், எம்.ஆர்.எப்., டயர் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, 61 பயிற்சி தொழிலாளர்கள் உட்பட, 820 பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஆண்டுதோறும் நிறுவனம் சார்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும், மருத்துவ காப்பீடு முன்பணத்தொகை, இந்தாண்டு தரப்படாததை கண்டித்து, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், 18வது நாளாக, சி.ஐ.டி.யு., அலுவலகம் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, என்.ஏ.பி.எஸ்., - தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. பயிற்சியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கான மருத்துவ காப்பீடு முன்பணத்தொகையை வழங்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.
தொழிலாளர் நலத்துறை சார்பில், நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் பங்கேற்ற பலகட்ட பேச்சு, தோல்வியில் முடிந்த நிலையில், இன்று மாலை மீண்டும் தேனாம்பேட்டை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு நடக்கவுள்ளது. இதில், சுமூக முடிவு எட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.