தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/13 ஆண்டாகியும் துவக்கப்படாத ரயில் பாதை திட்டம்...புத்துயிர் பெறுமா?கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதுார் - ஆவடி இணைப்பு:சென்னை நெரிசலுக்கு தீர்வு காண்பதில் தொடருது சிக்கல்

13 ஆண்டாகியும் துவக்கப்படாத ரயில் பாதை திட்டம்...புத்துயிர் பெறுமா?கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதுார் - ஆவடி இணைப்பு:சென்னை நெரிசலுக்கு தீர்வு காண்பதில் தொடருது சிக்கல்

13 ஆண்டாகியும் துவக்கப்படாத ரயில் பாதை திட்டம்...புத்துயிர் பெறுமா?கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதுார் - ஆவடி இணைப்பு:சென்னை நெரிசலுக்கு தீர்வு காண்பதில் தொடருது சிக்கல்


UPDATED : ஏப் 28, 2026 05:29 AM

ADDED : ஏப் 27, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2026 05:29 AM ADDED : ஏப் 27, 2026 06:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை புறநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதுார் - ஆவடி புதிய ரயில் பாதை திட்டம் அறிவித்து 13 ஆண்டுகளாகியும் இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. திட்டத்தை தாமதமின்றி செயல்படுத்த வேண்டுமென, சென்னை புறநகர் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக, சென்னையை ஒட்டி அமைந்துள்ள கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஏமாற்றம்


தாம்பரம் மற்றும் ஆவடி ஆகியவை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. ஆனாலும், இன்னும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் போக்குவரத்து இணைப்பு வசதிக்கான பணிகள் இன்னும் முடியவில்லை.

பயணியர் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்திற்காக, ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி வழித்தடத்தில், 58 கி.மீ., துாரம் புது ரயில் பாதை அமைக்கப்படும் என, 2013ல் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரயில்வேயின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதைடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இருப்பினும், அடுத்த கட்ட பணிகள் நடக்காதது, பயணியர் மத்தியில் ஏமற்றத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து, ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

சென்னை புறநகர் பகுதிகளில் மக்கள் தொகையும், குடியிருப்புகளும் பல மடங்கு அதிகரித்து விட்டன. சாதாரண நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுவே, பண்டிகை, விடுமுறை நாட்கள் என்றால், சென்னையை கடந்து செல்லவே இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஆகிவிடுகிறது. கூடுதல் ரயில் போக்குவரத்து இருந்தால், ஓரளவு நெரிசல் இன்றி பயணிக்கலாம்.

தாமதம்




சென்னை புறநகரில் மிகவும் முக்கிய திட்டமான, ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டம் அறிவித்து, 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், திட்ட அறிக்கையோடு அப்படியே நிற்கிறது. இனியும் தாமதம் செய்யக்கூடாது.

மாநில அரசு உதவியுடன் போதுமான நிலத்தை கையகப்படுத்தி, இந்த திட்டத்தை விரைவுப்படுத்த, ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Image 1570324


ஒப்புதலுக்காக காத்திருப்பு



இத்திட்டம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையை புறநகரான ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரியை இணைக்கும் புதிய பாதை திட்டம் மிகவும் முக்கியமானது. இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்.

நிலம் உட்பட அனைத்து வகையான செலவுக்கு மொத்த திட்ட மதிப்பீடு, 3,136 கோடி ரூபாய். வாரியம் ஒப்புதல் அளித்தவுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். ரயில்வேயுடன், தமிழக அரசு இணைந்து பங்களிப்பு செய்தால், இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us