/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீக்குளிப்பு சம்பவத்தில் ஒரே மாதத்தில் 3 பேர் பலி கேன்களில் பெட்ரோல் விற்பது தடுக்கப்படுமா?
/
தீக்குளிப்பு சம்பவத்தில் ஒரே மாதத்தில் 3 பேர் பலி கேன்களில் பெட்ரோல் விற்பது தடுக்கப்படுமா?
தீக்குளிப்பு சம்பவத்தில் ஒரே மாதத்தில் 3 பேர் பலி கேன்களில் பெட்ரோல் விற்பது தடுக்கப்படுமா?
தீக்குளிப்பு சம்பவத்தில் ஒரே மாதத்தில் 3 பேர் பலி கேன்களில் பெட்ரோல் விற்பது தடுக்கப்படுமா?
ADDED : ஏப் 21, 2025 01:57 AM
எண்ணுார்:ஒரே மாதத்தில் மூன்று தீக்குளிப்பு சம்பவங்களில், மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பெட்ரோல் பங்க்களில் கேன்களில் பெட்ரோல் விற்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட, ஆவடி, எண்ணுார் பகுதிகளில், ஒரே மாதத்தில் மூன்று தீக்குளிப்பு சம்பவங்களில், மூன்று பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் கலைக்கிடமாகவும், மற்றொருவர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
* ஏப்., 9ம் தேதி, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நுாரிஷா, 42, என்பவரின் வீட்டிற்கு வந்த, திருவொற்றியூர், தாங்கலைச் சேர்ந்த டில்லிபாபு, 47, என்பவர் வாக்குவாதம் செய்து, கேனில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, நுாரிஷாவை கட்டி பிடித்தார்.
இந்த தீ விபத்தில், இருவரும் பலத்த தீக்காயமடைந்து, 11 ம் தேதி நுாரிஷாவும், 14 ம் தேதி, டில்லிபாபுவும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
* ஏப்., 17 ம் தேதி, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 38, என்பவர், மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில், குடியிருப்பு வளாகத்தில், கேனில் வாங்கி வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 18 ம் தேதி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
* ஏப்., 18ம் தேதி அம்பத்துார், டீச்சர் காலனி, மகளிர் விடுதியில் தங்கி, ஆவடி, கண்ணடம்பாளையம் பகுதியில் ஆடை தயாரிப்பு தொழில் செய்து வந்தவர், சத்யா, 38, அவரது கணவர் ஜெபராஜ், 42, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வேலைக்கு வந்த ஜெபராஜ் தன் மீதும், சத்யா மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ள்ளார். இதில், இருவரும் தீக்காயமடைந்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மூன்று சம்பவங்களில், கேன்களின் பெட்ரோல் வாங்கி வந்து, தீக்குளிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. எனவே, காவல்துறை உயர் அதிகாரிகள் கவனித்து, பெட்ரோல் பங்குகளுக்கு கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

