நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லிவாக்கம், சிட்கோ நகர் நான்காவது பிரதான சாலையில், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயின்று வருகிறோம்.
நுழைவாயில் அருகில் முன்பு, இரு பாதையிலும் வேகத்தடை இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன் பெய்த பருவமழையின் போது, தண்ணீர் செல்வதற்காக வேகத்தடை அகற்றப்பட்டது.
அதன்பின், பல முறை புதிய சாலைகள் அமைக்கப்பட்டும், வேகத்தடை அமைக்கப்படவில்லை. எனவே, வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாணவ - மாணவியர், வில்லிவாக்கம் அரசு பள்ளி.