/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி - தாம்பரம் சாலை சந்திப்பு யு- - டர்னில் வேகத்தடை அமையுமா?
/
வேளச்சேரி - தாம்பரம் சாலை சந்திப்பு யு- - டர்னில் வேகத்தடை அமையுமா?
வேளச்சேரி - தாம்பரம் சாலை சந்திப்பு யு- - டர்னில் வேகத்தடை அமையுமா?
வேளச்சேரி - தாம்பரம் சாலை சந்திப்பு யு- - டர்னில் வேகத்தடை அமையுமா?
ADDED : மே 09, 2025 01:14 AM
பள்ளிக்கரணை, வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலை, ஒரு மணி நேரத்தில், 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடக்கும் மிக முக்கியமான இணைப்பு சாலையாகும்.
இச்சாலையில், கைவேலி சிக்னல் முதல் நாராயணபுரம் மேம்பாலம் வரை, அடிக்கடி வாகன நெரிசல் அதிகரித்து வந்தது.
அதனால், கைவேலி சிக்னல், மயிலை பாலாஜி நகர் சிக்னல், நாராயணபுரம் மேம்பால சிக்னல் வரை, போக்குவர்த்து போலீசார் போக்குவரத்தில் சில மாற்றங்களை செய்தனர்.
இதில், வேளச்சேரி - பல்லாவரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், நாராயணபுரம் மேம்பாலத்தை கடந்து, தனியார் பல் மருத்துவமனை மற்றும் கல்லுாரி எதிரே உள்ள சந்திப்பில், யு - -டர்ன் எடுத்து, மேம்பாலத்தின் அணுகு சாலை வாயிலாக, பல்லாவரம் நோக்கி செல்லலாம்.
மருத்துவமனை சந்திப்பு, மேம்பாலத்திற்கும், காமகோட்டி நகர் சிக்னலுக்கும் இடையில் அமைந்துள்ளது.
குறிப்பிட்ட சிக்னலிருந்து வாகனங்கள் வேகமாக வருவதால், பல்லாவரம் நோக்கி செல்லும் வாகனங்கள், யு - டர்ன் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
தவிர, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லுாரி ஊழியர்கள், நோயாளிகள் குறிப்பிட்ட சந்திப்பை கடக்கும்போது, அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, பெரும் விபத்தை தவிர்க்க, அச்சந்திப்பின் இருபுறமும் வேகத்தடை அமைக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.