ADDED : பிப் 27, 2024 12:21 AM

அண்ணா நகர் மண்டலம், 100வது வார்டு, அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், செயின்ட் ஜார்ஜ் தனியார் பள்ளி அருகில், கான்வென்ட் சாலை உள்ளது.
இந்த சாலை கீழ்ப்பாக்கம், டி.பி.,சத்திரம் கல்லறை உள்ளிட்ட பிரதான பகுதிகளுக்குச் செல்லும் பாதையாக உள்ளது. சாலையைச் சுற்றி, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உட்பட ஏராளமான தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
குடியிருப்புகள் மத்தியில் பிரதான சாலை இருப்பதால், தினமும் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன. இதற்கு, வேகத்தடை இல்லாததே காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த வாரத்தில் இச்சாலையில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டதால், வாகனங்கள் வேகமாகச் செல்கின்றன. எனவே, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் மனு அளித்தும் அலட்சியமாக உள்ளனர். எனவே, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
