/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து மாற்றம் பின்பற்றப்படுமா
/
போக்குவரத்து மாற்றம் பின்பற்றப்படுமா
ADDED : பிப் 07, 2024 12:28 AM

வியாசர்பாடி, புளியந்தோப்பு - வியாசர்பாடி இடையே கணேசபுரம் சுரங்கப்பாலம் அருகே ஐ.ஐ.டி. அங்கீகாரத்துடன் நான்கு வழிப்பாதையாக மேம்பாலம் கட்டுமானப்பணி தொடங்கி நடந்து வருகிறது. 142 கோடி ரூபாய் செலவில், 600 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டப்பட உள்து. வடசென்னையில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் கணேசபுரம் சுரங்கப்பாலம் மூழ்குவது தொடர்கதையாகி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாகவும், வாகன நெரிசலை குறைக்கவும் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது.
புளியந்தோப்பு ஆடுத்தொட்டியை அடுத்த கால்வாய் பகுதியில் துவங்கும் மேம்பாலம், ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து வியாசர்பாடி ஏரிக்கரை சந்திப்பு வரை கட்டப்படுகிறது.
மேம்பாலப்பணியை விரைவுப்படுத்தும் வகையில், இப்பகுதியில் கடந்த ஜன. 2ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பெரம்பூர் மற்றும் வியாசர்பாடியிலிருந்து டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி சாலை, கணேசபுரம் சாலைவழியாக புரசைவாக்கம் செல்லும் வாகனங்கள், ஒரு வழிப்பாதையில் செல்ல வேண்டும்.
புரசைவாக்கம், பெரம்பூர், புளியந்தோப்பிலிருந்து செல்லும் வாகனங்கள், ஸ்டீபன்சன் சாலை, பெரம்பூர் பிரதான சாலை தெற்கு, முரசொலி மாறன் மேம்பாலம் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக மாதவரம், வியாசர்பாடி செல்லலாம். ஓராண்டுக்கு இந்த மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் இருவழியிலும் வாகனங்களை அனுமதிப்பதால், 24 மணிநேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதிலும் பீக் அவர்ஸில் குறுகலான சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்வதால் நெரிசலுடன், பாலப்பணிக்கும் இடையூறு ஏற்படுவதுடன், அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லுாரிக்கு செல்வபவர்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகின்றனர்.

