/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விம்கோ நகர் மெட்ரோ 'கார் பார்க்கிங்' மூடல்
/
விம்கோ நகர் மெட்ரோ 'கார் பார்க்கிங்' மூடல்
ADDED : டிச 04, 2025 01:59 AM

சென்னை: விம்கோநகர் மெட்ரோ ரயில் நிலையத்தின், நான்கு சக்கர வாகன நிறுத்த வளாகத்தில், மழை நீர் தேங்கியதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.
இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு:
தொடர் மழை காரணமாக வெள்ள நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்தில், நிறுத்தப்பட்டுள்ள தங்கள் வாகனங்களை பயணியர் உடனடியாக எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தண்ணீர் வடியும் வரை, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் மூடப்பட்டிருக்கும். இயல்பு நிலைக்கு பின்னர் மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

