/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓராண்டுக்குள் கும்மிருட்டான மைதானம்
/
ஓராண்டுக்குள் கும்மிருட்டான மைதானம்
ADDED : பிப் 01, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சிங்கார சென்னை 2.0' திட்ட நிதி 3 கோடி ரூபாய் மதிப்பில், திரு.வி.க.நகரில் கால்பந்து விளையாட்டு திடல் திறக்கப்பட்டது. கடந்தாண்டு அக்டோபர் மாதம், முதல்வர் ஸ்டாலின் மைதானத்தை திறந்து வைத்தார்.
கடந்த சில வாரங்களாக, இரவு நேரத்தில் மைதானத்தில் உள்ள விளக்குகள் எரிவதில்லை. நடைபாதைக்கான விளக்குகள் மட்டுமே எரிகின்றன. இதனால் பள்ளி முடித்து வரும் மாணவர்கள், இளைஞர்கள் பலர் மைதானத்தில் இருட்டிலேயே பயிற்சி மேற்கொள்கின்றனர். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேல் முருகன், திரு.வி.க.நகர்.