/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுபானம் விற்ற பெண் கைது 54 மதுபாட்டில்கள் பறிமுதல்
/
மதுபானம் விற்ற பெண் கைது 54 மதுபாட்டில்கள் பறிமுதல்
மதுபானம் விற்ற பெண் கைது 54 மதுபாட்டில்கள் பறிமுதல்
மதுபானம் விற்ற பெண் கைது 54 மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஏப் 22, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிமுனை, பாரிமுனை, ஜாபர் சாரங் தெருவில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, வடக்கு கடற்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், நேற்று காலை அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுபானம் விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி, 40, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 180 மி.லி., அளவு கொண்ட, 54 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், கைதான ஜோதி மீது, 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின், சிறையில் அடைக்கப்பட்டார்.