/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 சவரன் நெக்லஸ் திருடிய பெண் கைது
/
10 சவரன் நெக்லஸ் திருடிய பெண் கைது
ADDED : ஜன 22, 2025 12:36 AM
யானைகவுனி, யானைகவுனி, என்.எஸ்.சி.போஸ் சாலை பகுதியில் 'ஸ்ரீமஹாவீர் ஜுவல்லரி' செயல்படுகிறது. இதன் உரிமையாளர் நரேஷ்குமார் மேத்தா, 54.
கடந்த 17ம் தேதி இரவு கடை மூடுவதற்கு முன், நகைகளை சரிபார்த்த போது, 240 கிராம் தங்க நெக்லஸ்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த முத்துலட்சுமி, 40, என்பவர் நெக்லஸ்கள் திருடி சென்றது தெரியவந்தது. நகைக்கடையின் வாடிக்கையாளரான முத்துலட்சுமி, கடந்த மாதம் 24ம் தேதி நெக்லஸ் 'ஆர்டர்' கொடுத்து விட்டு, கடையில் இருந்த நெக்லஸ்களை திருடிச் சென்றுள்ளார்.
பின், 17ம் தேதி 'ஆர்டர்' கொடுத்த நெக்லஸை வாங்குவதற்கு குழந்தையுடன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது, புது நெக்லஸை பார்த்து, அதில் சில குறைபாடுகள் உள்ளன. சரி செய்ய சொல்லி விட்டு, செல்லும்போது மேலும் சில நெக்லஸ்களை திருடி சென்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 83 கிராம் எடையிலான 3 தங்க நெக்லஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.