/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகை கடையில் 4 சவரன் திருடியபெண் கைது
/
நகை கடையில் 4 சவரன் திருடியபெண் கைது
ADDED : செப் 02, 2025 02:02 AM

அம்பத்துார், வெங்கடாபுரத்தில் எம்.பி., ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையை நடத்தி வருபவர் அபிஷேக், 23. நேற்று மதியம், கடைக்கு வந்த பெண் நகை வாங்குவதுபோல நடித்து, 4 சவரன் செயினை பறித்து சென்றார். அம்பத்துார் போலீசார் விசாரித்து, நகை திருட்டில் ஈடுபட்ட புதுார், சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சேர்ந்த திவ்யா, 34, என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நண்பனை தாக்கியமூன்று பேர் கைது:
புளியந்தோப்பு, சாஸ்திரி நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் ஜோஸ்வா, 25. இவர், நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு ஜெ.ஜெ.நகர் 7வது தெரு வழியாக செல்லும்போது, நண்பர்கள் மூவர் மது வாங்கித் தரும்படி கூறியுள்ளனர். ஜோஸ்வா மறுக்கவே, அவரை சரமாரியாக தாக்கி சென்றனர். இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், புளியந்தோப்பு கஸ்துாரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 32, பிரதீப், 27, மணிகண்டன், 36, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இருதரப்பு மோதல்:ஐவர் கைது
ஓட்டேரியைச் சேர்ந்தவர் விசாலம், 43. அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி, 21. கடந்த 23ம் தேதி சிவரஞ்சனி மீது விசாலம் சொம்பை துாக்கி அடித்ததாகவும், அது குழந்தையின் மீது பட இருந்து தப்பியது. சிவரஞ்சனி சில திருநங்கையருடன் சேர்ந்து விசாலத்தையும் அவரது ஆதரவாளர்களையும் தாக்கியுள்ளார். இருதரப்பையும் சேர்ந்த ஐந்து பேரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.