/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணிபுரிந்த வீட்டில் திருடிய பெண் கைது
/
பணிபுரிந்த வீட்டில் திருடிய பெண் கைது
ADDED : டிச 26, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ராயப்பேட்டை, ஹரிகந்த் ராஜ்பவன் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கல்யாணி, 80. சில தினங்களுக்கு முன், வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்துள்ளார்.
அப்போது, 60 கிராம் தங்க கட்டி, 1.5 சவரன் பிரேஸ்லேட், 21,000 ரூபாய் உள்ளிட்டவை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், வீட்டு வேலைக்கு வந்த, மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி, 44, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று, அவரை கைது செய்த போலீசார், ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.