/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது
/
வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது
ADDED : மே 09, 2025 12:37 AM

சூளைமேடு, சூளைமேடு, பெரியார் பாதை, கன்னியப்பன் தெருவைச் சேர்ந்தவர் சுரேந்தர், 40. பட்டதாரியான இவர், உடல் நலக்குறைவு காரணமாக, வேலைக்கு ஏதும் செல்லாமல், வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
கடந்த 5ம் தேதி, வீட்டில் பீரோவில் வைத்திருந்த பணத்தை பார்த்தபோது, 45,000 ரூபாய் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து, சூளைமேடு காவல் நிலையத்தில், சுரேந்தர் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வீட்டில் வேலை பார்த்து வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி, 49, என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், 40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வசந்தி, கடந்த மாதம் தான் சுரேந்தரின் உடல் நிலை சரியில்லாத தாயாரை கவனித்துக் கொள்வதற்காக பணிக்கு சேர்ந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.