/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீதிபதியின் மகள் எனக்கூறி போலீசாரை மிரட்டியவர் கைது
/
நீதிபதியின் மகள் எனக்கூறி போலீசாரை மிரட்டியவர் கைது
நீதிபதியின் மகள் எனக்கூறி போலீசாரை மிரட்டியவர் கைது
நீதிபதியின் மகள் எனக்கூறி போலீசாரை மிரட்டியவர் கைது
ADDED : ஜூன் 28, 2025 04:27 AM

செம்பியம்:நீதிபதியின் மகள் எனக்கூறி நாடகமாடிய 'மாஜி' பெண் போலீஸ் கைது செய்யப்பட்டார்.
செம்பியம் காவல் நிலையத்துக்கு, கடந்த 5ம் தேதி போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், தன்னை நீதிபதியின் மகள் என அறிமுகப்படுத்தி உள்ளார். போலீசாரை மிரட்டும் தொனியில் பேசி, சாப்பிட்டதற்கான தொகை, அறை வாடகை உள்ளிட்டவை ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
சந்தேகமடைந்த செம்பியம் போலீசார், ரேகா தங்கியிருக்கும் அறைக்கு நேற்று முன்தினம் இரவு சென்று, அவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், அவர் நீதிபதியின் மகள் போல் நாடகமாடியது, பெரம்பூர் அகரம், சிதம்பரம் தெருவைச் சேர்ந்த ரேகா, 42, என்பது தெரியவந்தது. மேலும், அவர் காவல் துறையில் போலீசாக பணிபுரிந்துள்ளார்.
ஆறு மாதங்களாக பணிக்கு செல்லாததால், ஒழுங்கீன நடவடிக்கையால் கடந்தாண்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து, ரேகாவை கைது செய்த செம்பியம் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.