/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடைக்கலம் கொடுத்த வீட்டில் நகை திருடிய பெண் சிக்கினார்
/
அடைக்கலம் கொடுத்த வீட்டில் நகை திருடிய பெண் சிக்கினார்
அடைக்கலம் கொடுத்த வீட்டில் நகை திருடிய பெண் சிக்கினார்
அடைக்கலம் கொடுத்த வீட்டில் நகை திருடிய பெண் சிக்கினார்
ADDED : ஆக 01, 2025 12:32 AM
வேளச்சேரி செவிலியர் தேர்வு எழுத வந்து, தங்க இடம் கொடுத்த வீட்டில் நகை திருடிய பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி, வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் பார்த்திபன், 32. இவரது துாரத்து உறவினரான திண்டுக்கல், பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் தமிழரசி, 27. ஆரம்ப சுகாதார நிலையத்தில், தற்காலிக ஊழியராக பணிபுரிந்தார்.
இவர், கடந்த மாதம் 1ம் தேதி, செவிலியர் தேர்வு எழுதுவதற்காக, சென்னை வந்து பார்த்திபன் வீட்டில் தங்கினார். தேர்வு எழுதி விட்டு, 3ம் தேதி ஊருக்கு புறப்பட்டார்.
மறுநாள், பார்த்திபன் குடும்பத்தார் கோவிலுக்கு செல்ல, பீரோவில் நகையை பார்த்தனர். அதில், 6 சவரன் நகை திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, தமிழரசியின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இது குறித்து, பார்த்திபன் வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து, தமிழரசி தலைமறைவானது தெரிந்தது. அவரது மொபைல் போன் இருப்பிடத்தை வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., அலுவலகம் வந்தது தெரிந்தது.
போலீசார் அங்கு சென்று, தமிழரசியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நகை பறிமுதல் செய்யப்பட்டது.