/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமணமான ஒரே மாதத்தில் பெண் தற்கொலை
/
திருமணமான ஒரே மாதத்தில் பெண் தற்கொலை
ADDED : மார் 17, 2025 02:44 AM
கொரட்டூர்.:கொரட்டூர், சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர்கள் பூபாலன், 30, பாக்யலட்சுமி, 25. கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து, கடந்த மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.
நேற்று காலை பூபாலன் வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில், கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார். பாக்யலட்சுமி, அவரை தொடர்பு கொண்டு, தான் கடைக்கு சென்று வருவதாக கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில், பூபாலன் மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாக்யலட்சுமி துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. கொரட்டூர் போலீசாரின் விசாரணையில், பூபாலனுக்கு, இளம்பெண் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், இது பாக்யலட்சுமிக்கு தெரிந்ததால், தற்கொலை செய்திருக்ககூடும் என தெரிகிறது. ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்க உள்ளது.