நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்: தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் ராதா, 53. குன்றத்துார் அடுத்த கோவூரில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் தங்கி, வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று மதியம், காப்பகத்தின் அருகே உள்ள கடைக்கு செல்ல, சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, குன்றத்துாரில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ராதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரான அரும்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார், 47, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.