/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
/
மின்சார ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
ADDED : நவ 06, 2025 03:38 AM

எண்ணுார்: எர்ணாவூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
எர்ணாவூர் மேம்பாலம் அருகே, ரயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண், கை, கால் மற்றும் தலை துண்டான நிலையில் இறந்து கிடப்பதாக, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதில், தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான அமுலு, 40, என்பதும், கணவர் பிரிந்து சென்ற நிலையில், மகன் பரத்துடன் வசித்து வந்ததும் தெரிய வந்தது.
சில மாதங்களுக்கு முன், எர்ணாவூர், முருகன் கோவில் சந்திப்பில் வாடகை வீட்டில் குடியேறிய அமுலு, சுனாமி குடியிருப்பில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு செல்வதற்காக, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது, சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி, உயிரிழந்தது தெரிய வந்தது.

