நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரைப்பாக்கம்: குப்பை லாரி மோதி, நடந்து சென்ற பெண் பலியானார்.
பெருங்குடி, சீவரம் பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி, 54. நேற்று, கடைக்கு சென்று, பெருங்குடி, கார்ப்பரேஷன் சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த குப்பை லாரி மோதி, சீதாலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். அடையாறு போலீசார், லாரி ஓட்டுநரான மயிலாப்பூரைச் சேர்ந்த வீரராகவன், 34, என்பவரை கைது செய்தனர்.