/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டெங்கு' காய்ச்சல் பெண் உயிரிழப்பு?
/
'டெங்கு' காய்ச்சல் பெண் உயிரிழப்பு?
ADDED : அக் 08, 2025 02:44 AM
பெரியபாளையம், பெரியபாளையம், எல்லாபுரம் ராள்ளபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி ஜமுனா, 44. உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜமுனா, கடந்த 26ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில், 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த 28ம் தேதி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று உயிரிழந்தார். பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் சீதாலட்சுமி கூறுகையில், ''டெங்கு காய்ச்சலால் ஜமுனா இறந்ததாக கூறுவது தவறு. ஆனாலும், அப்பகுதியில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்,” என்றார்.