/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடில் தலையில் காயத்துடன் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்
/
கோயம்பேடில் தலையில் காயத்துடன் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்
கோயம்பேடில் தலையில் காயத்துடன் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்
கோயம்பேடில் தலையில் காயத்துடன் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்
ADDED : ஜூலை 19, 2025 11:18 PM
கோயம்பேடு:கோயம்பேடு, மண்ணடி தெருவில் உள்ள ஒரு வீட்டில், பெண் நிர்வாணமாக தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக, கோயம்பேடு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
போலீசாரின் விசாரணையில், உயிரிழந்தவர் தனலட்சுமி, 50, என்பதும், ஓராண்டாக அந்த வீட்டில் வாடகைக்கு தங்கி, பிராட்வே பகுதியில் பூ வியாபாரம் செய்ததும் தெரியவந்தது.
இரு நாட்களுக்கு முன், கோயம்பேடு 100 அடி சாலை தே.மு.தி.க., அலுவலகம் அருகே பேருந்தில் இருந்து இறங்கி நடந்து வந்தபோது, கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது.
ஆனால், மருத்துவமனை செல்லாமல், வீட்டிலேயே இருந்துள்ளார். அதே குடியிருப்பைச் சேர்ந்த மாலா, 38, என்பவரும், தனலட்சுமியும் மாலை நேரத்தில், வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசுவது வழக்கம்.
நேற்று முன்தினம் தனலட்சுமியை காணாததால், அவரது வீட்டிற்கு சென்று மாலா பார்த்தபோது, கதவு பூட்டப்படாமல் இருந்தது. தலையில் ரத்தம் கசிந்தபடி, நிர்வாணமாக தனலட்சுமி இறந்து கிடந்தது தெரியவந்தது.
தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.