/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபயிற்சியில் பெண்ணுக்கு தொந்தரவு
/
நடைபயிற்சியில் பெண்ணுக்கு தொந்தரவு
ADDED : செப் 22, 2024 06:54 AM
சென்னை : அடையாறு பகுதியை சேர்ந்த 40 வயது பெண், கஸ்துாரிபாய்நகர் பிரதான சாலையில் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
அப்போது, 25 வயது மதிக்கத்தக்க நபர் காரில் பின் தொடர்ந்துள்ளார்.
அந்த பெண்ணிடம் பேச்சு கொடுக்க முயற்சித்து வந்துள்ளார். வாலிபரை அலட்சியப்படுத்தியும், அவர் பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதை கணவரிடம் பெண் கூறி உள்ளார்.
அதன் பிறகும், நான்கு நாட்களாக பின்தொடர்ந்ததால், நேற்று முன் தினம் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைக்க, பெண்ணின் கணவர் முயன்றார். உடனே காரில் அங்கிருந்து அதிவேகமாக அந்த வாலிபர் தப்பிச் சென்றார்.
அடையாறில் உள்ள ஒரு வீட்டில் அந்த வாலிபர் நுழைந்ததாக, போலீசில் பெண்ணின் கணவர் புகார் அளித்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.