/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அழகு நிலையத்தில் குதித்து தப்பிய பெண் காயம்
/
அழகு நிலையத்தில் குதித்து தப்பிய பெண் காயம்
ADDED : செப் 26, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, எழும்பூர் எத்திராஜ் சாலையிலுள்ள அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக, துணை கமிஷனரின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று மதியம், 2:30 மணியளவில், போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, வடமாநில பெண் ஊழியர் ஒருவர், ஜன்னல் வழியாக தப்ப முயன்றபோது, கால் இடறி கீழே விழுந்தார். இதில், கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார்.
அவரை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் அங்கிருந்த ஐந்து பெண்களை பிடித்து, எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.