/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் பெட்டியில் நடு படுக்கை கழன்று விழுந்ததில் பெண் காயம்
/
ரயில் பெட்டியில் நடு படுக்கை கழன்று விழுந்ததில் பெண் காயம்
ரயில் பெட்டியில் நடு படுக்கை கழன்று விழுந்ததில் பெண் காயம்
ரயில் பெட்டியில் நடு படுக்கை கழன்று விழுந்ததில் பெண் காயம்
ADDED : மே 13, 2025 12:28 AM
சென்னை: சென்னை, முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி சூர்யா. இருவரும் சென்ட்ரல் - பாலக்காடு விரைவு ரயிலில் 'எஸ் 5' முன்பதிவு பெட்டியில், கீழ் படுக்கையில் அமர்ந்து, நேற்று முன்தினம் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, நடுவில் இருந்த படுக்கை கழன்று விழுந்ததில் சூர்யா காயமடைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு, சேலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று அளித்த விளக்கம்:
பாலக்காடு விரைவு ரயில், ஜோர்லார்பேட்டை அருகில் பயணித்தபோது, நடுப்படுக்கை கழன்று விழுந்து, கீழ் படுக்கையில் இருந்த பயணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் கிடைத்தவுடன், உடனடியாக மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் பயணி, மொரப்பூர் ரயில் நிலையத்தில் இறங்க மறுத்ததால், சேலத்தில் இறங்கி அதிகாலை 3:05 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து, மெக்கானிக்கல், பாதுகாப்பு படை மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து ஆய்வு நடத்தினர். இதில் நடு படுக்கையின் சங்கிலி போல்ட் மிகவும் உறுதியாகவே இருந்துள்ளது.
ஆனால், நடு படுக்கையை 2.5 செ.மீ.,க்கு மேல் உயர்த்திய பின்னரே கொக்கி இணைக்கப்படாமல், பயணி மீது விழுந்துள்ளது.
பயணி, நடு படுக்கையின் சங்கிலி கொக்கியை சரிவர பயன்படுத்தாததன் விளைவாக, இந்த சம்பவம் நடந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.