/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணுக்கு 'அல்வா' போலீஸ்காரரிடம் விசாரணை
/
பெண்ணுக்கு 'அல்வா' போலீஸ்காரரிடம் விசாரணை
ADDED : பிப் 01, 2024 12:39 AM
வளசரவாக்கம், சென்னை, நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தம்பிதுரை, 36; வளசரவாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், வளசரவாக்கத்தில் ரோந்து பணிக்குச் சென்ற போது, இளம்பெண் ஒருவருடன் பழக்கும் ஏற்பட்டுள்ளது. அவருடன் நட்பாக பழகி, பின் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, 10 மாதம் குடும்பம் நடத்தியுள்ளார்.
இந்நிலையில், தம்பிதுரைக்கு ஏற்கனவே திருமணமானது குறித்து, இளம்பெண்ணிற்கு தெரிந்துள்ளது. இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, வளசரவாக்கம் உதவி கமிஷனரிடம், சில நாட்களுக்கு இளம்பெண் புகார் அளித்தார்.
இந்த புகார் மனு வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், தம்பிதுரையிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.