/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில் பெண் பலி எஸ்.ஐ., மகன், ஓட்டுநர் கைது
/
விபத்தில் பெண் பலி எஸ்.ஐ., மகன், ஓட்டுநர் கைது
ADDED : பிப் 06, 2025 12:23 AM
சென்னை, ஆலந்துாரைச் சேர்ந்தவர் பிரவீன், 35; பிராட்வேயில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார்.
இவர், நேற்று காலை மனைவி தீபாவை அழைத்துக் கொண்டு, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில், பிராட்வே நோக்கி சென்றார். தேனாம்பேட்டை சிக்னல் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த 'ராயல் என்பீல்டு' புல்லட் வாகனம், இவரது வாகனத்தில் மோதியது.
இதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில், கே.கே.நகரில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற, தடம் எண்: 11 பேருந்து, பிரவீனின் தலையில் ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே, மனைவியின் கண்முன் பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய பாண்டிபஜார் குற்றப்பிரிவு எஸ்.ஐ., சாந்தலட்சுமி மகன் சிவம், 21, மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன், 49, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.