/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி மோதி ஆட்டோவில் சென்ற பெண் பலி
/
லாரி மோதி ஆட்டோவில் சென்ற பெண் பலி
ADDED : செப் 20, 2024 11:58 PM
மதுராந்தகம், சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், 40. ஆட்டோ ஓட்டுனர். இவர், மனைவி கிருஷ்ணவேணி, 34, மகள்கள் நவ்யாஸ்ரீ, 16, சோபியா, 14, ஆகியோருடன், நேற்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆட்டோவில் சென்றனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில், மாமண்டூர் அருகே ஆட்டோ சென்றபோது, திருச்சிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற ஐச்சர் லாரி,திடீரென ஆட்டோவின் பின்னால் மோதியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த நால்வரும் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை படாளம் போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, கிருஷ்ணவேணி, 34, உயிரிழந்தார். தலைமறைவான ஐச்சர் லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.