ADDED : ஜன 01, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,
கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம், நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹபிபா, 39. தாம்பரத்தில் உள்ள எல்.கே.எஸ்., நகைக்கடையில், மாதம் 10,000 ரூபாய் நகை சீட்டு போட்டிருந்தார்.
நேற்று மதியம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 சவரன் தங்க வளையல்களை வாங்கினார். பின், வளையல்களை, கை பையில் வைத்துக் கொண்டு, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு சென்ற தடம் எண்-500 என்ற, மாநகர பேருந்தில் ஏறினார்.
அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர்கள், கை பையில் இருந்த வளையல்களை திருடி சென்றனர்.
இது குறித்து, ஹபிபா கொடுத்த புகாரின்படி, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.