/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய பெண்ணிடம் 'ஆட்டை'
/
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய பெண்ணிடம் 'ஆட்டை'
ADDED : ஜன 22, 2025 12:29 AM
புளியந்தோப்பு, பாடி, முருகப்பா சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா, 26. துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் புளியந்தோப்பு குருசாமி நகர் முதல் தெருவில் உள்ள கல்லுாரி தோழி மகேஸ்வரியை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது, புளியந்தோப்பு டிமலர்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் காவல் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில், இரவு 7:00 மணியளவில் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது கண் எதிரே நடந்த சிறிய விபத்தை பார்த்ததும், அங்கு சென்று கீழே விழுந்தவர்களுக்கு உதவி செய்துள்ளார்.
மீண்டும் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, தோளில் மாட்டியிருந்த தன் கைப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதில், 30,000 ரூபாய் மதிப்பிலான இயர் பட்ஸ், 5,000 ரூபாய் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் இருந்துள்ளன. இது குறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பிரியங்கா புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருடனை தேடி வருகின்றனர்.