/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேலையில் தீ பிடித்து பெண் படுகாயம்
/
சேலையில் தீ பிடித்து பெண் படுகாயம்
ADDED : மே 17, 2025 09:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவான்மியூர்:திருவான்மியூர், மருந்தீஸ்வரர் நகரை சேர்ந்த ரகோத்தமன் மனைவி அன்புஒளி, 53. நேற்று முன்தினம் இரவு, வீட்டில் சாமி கும்பிட கற்பூரம் ஏற்றினார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, அன்புஒளியின் சேலையில் தீப்பிடித்தது. இதில், அவர் உடலில் 45 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து, திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.