/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.25 லட்சம் நகையை ஒப்படைத்த பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு
/
ரூ.25 லட்சம் நகையை ஒப்படைத்த பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு
ரூ.25 லட்சம் நகையை ஒப்படைத்த பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு
ரூ.25 லட்சம் நகையை ஒப்படைத்த பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு
ADDED : ஜூலை 05, 2025 12:40 AM

அயப்பாக்கம், தாம்பரம், மாடம்பாக்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - மீனாட்சி தம்பதியர், கடந்த 27ம் தேதி, அயப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், இரு வீட்டாரும் திருமண மண்டபத்தில் இருந்து சென்றுவிட்டனர். இரு தினங்களுக்கு முன், திருமண மண்டபத்தில் பணியாற்றும், திருச்சியைச் சேர்ந்த ஜெயமணி, 45, துாய்மை பணி மேற்கொண்டார்.
அப்போது, மண்டபத்தில் இருந்த ஒரு அறையில், கட்டிலுக்கு அடியில் கிடந்த பையை எடுத்து பார்த்தார். அதில், வைரம் உள்ளிட்ட நகைகள் இருந்தன.
இதையடுத்து, அந்த பையை, மண்டபத்தின் மேலாளரிடம் ஒப்படைத்தார். பின், திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார், ராமகிருஷ்ணன் - மீனாட்சி தம்பதியரை அழைத்து விசாரித்த போது, அவர்கள் நகைகளை தவறவிட்டது தெரிந்தது.
பின், ஆவடி துணை கமிஷனர் முன்னிலையில், ராமகிருஷ்ணன் - மீனாட்சி தம்பதியரிடம், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், நேற்று ஒப்படைக்கப்பட்டன.
நகையை பத்திரமாக ஒப்படைத்த மண்டப பணியாளர் ஜெயமணியின் நேர்மையை பாராட்டி, போலீசார் அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். ராமகிருஷ்ணன் - மீனாட்சி தம்பதியர், ஜெயமணிக்கு நான்கு கிராம் தங்க மோதிரத்தை பரிசளித்தனர்.