/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை கிடங்கில் பெண் உடல் :ஆர்.கே.பேட்டையில் பரபரப்பு
/
குப்பை கிடங்கில் பெண் உடல் :ஆர்.கே.பேட்டையில் பரபரப்பு
குப்பை கிடங்கில் பெண் உடல் :ஆர்.கே.பேட்டையில் பரபரப்பு
குப்பை கிடங்கில் பெண் உடல் :ஆர்.கே.பேட்டையில் பரபரப்பு
ADDED : மார் 05, 2026 05:29 AM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் உடலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த புத்தேரியைச் சேர்ந்தவர் சுரேஷ், இவரது மனைவி நவநீதம், 30. தம்பதிக்கு வெண்பா, 9, ஜெஸ்சி, 8, என, இரண்டு மகள்கள் உள்ளனர்.
வழக்கம்போல தம்பதி இருவரும், நேற்று அருகே உள்ள வயல்வெளிக்கு வேலைக்கு சென்றனர். அங்கு, தனித்தனியே விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
பகல் 11:30 மணியளவில், நவநீதத்தை தேடி சுரேஷ் சென்றபோது, ஏரிக்கரை ஒட்டிய குப்பை கிடங்கில், நவநீதம் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், நவநீதத்தின் சடலத்தை கைப்பற்றி, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நவநீதத்தை யாரேனும் கொலை செய்தனரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.