/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை கடந்த பெண்கள் 'புல்லட்' மோதி உயிரிழப்பு
/
சாலையை கடந்த பெண்கள் 'புல்லட்' மோதி உயிரிழப்பு
ADDED : ஜன 12, 2024 11:53 PM

திருவொற்றியூர்,திருவொற்றியூர், ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பவானி, 38. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுபா, 37. இருவரும், மீன் வியாபாரம் செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, காசிமேடு மீன் மார்க்கெட் செல்வதற்காக, எண்ணுார் விரைவு சாலை - ஒண்டிக்குப்பம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது, எண்ணுாரில் இருந்து ராயபுரம் நோக்கி அதிவேகமாக சென்ற, 'புல்லட்' ரக இரு சக்கர வாகனம், அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சுபா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பவானியை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார்.
இருவரது உடல்களும், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய, தனியார் கல்லுாரி மாணவர்களான, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பரத், 20, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 20, ஆகியோரை கைது செய்தனர்.
இருவர் மீதும், அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல், கொலையாகாத மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விபத்தில், ஒரே பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.