/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் தடையை கண்டித்து பெண்கள் சாலை மறியல்
/
மின் தடையை கண்டித்து பெண்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 05, 2025 11:35 PM
வியாசர்பாடி :தொடர் மின் தடையை கண்டித்து, பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து முடங்கியது.
வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் - கென்னடி நகரில், ஐந்து தெருக்களில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் ஒரு வாரமாக அறிவிப்பு ஏதுமின்றி மின் தடை ஏற்படுவதால், மக்கள் துாக்கம் இழந்து தவித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று காலை, சத்தியமூர்த்தி நகர் - வியாசர்பாடி காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போலீசார், மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி, தொடர் மின் தடை பிரச்னைக்கு முடிவு காண்பதாக உறுதியளித்தனர்.
அதைத்தொடர்ந்து, பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குரத்து முடங்கியது.