sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களுக்கும் இப்போது... ஆபத்து:  கத்திமுனையில் குடும்பத்தை கட்டிப்போட்டு துணிகர கொள்ளை

/

வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களுக்கும் இப்போது... ஆபத்து:  கத்திமுனையில் குடும்பத்தை கட்டிப்போட்டு துணிகர கொள்ளை

வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களுக்கும் இப்போது... ஆபத்து:  கத்திமுனையில் குடும்பத்தை கட்டிப்போட்டு துணிகர கொள்ளை

வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களுக்கும் இப்போது... ஆபத்து:  கத்திமுனையில் குடும்பத்தை கட்டிப்போட்டு துணிகர கொள்ளை

2


UPDATED : ஜன 31, 2026 05:04 AM

ADDED : ஜன 31, 2026 05:02 AM

Google News

UPDATED : ஜன 31, 2026 05:04 AM ADDED : ஜன 31, 2026 05:02 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களுக்கும் ஆபத்து உண்டாகியுள்ளது. நேற்று அதிகாலை, வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணை, முகமூடி கும்பல் கத்திமுனையில் மிரட்டி, செயின் பறித்துள்ளது. அதோடு, அந்த பெண்ணின் வீடு புகுந்து, குடும்பத்தில் உள்ள ஆறு பேரையும் கட்டிப்போட்டு, 50 லட்சம் ரூபாய், 35 சவரன் நகைகளையும் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை புழல் காவாங்கரை, மகாவீர் கார்டன் முதல் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார், 50. இவர், தமிழகம் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில், மொத்த ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். வீட்டில் மனைவி வசந்தா, தாய் மற்றும் இரண்டு மகள்களுடன், விஜயகுமார் வசித்து வருகிறார்.

Image 1528979




Image 1528980
நேற்று அதிகாலை பனி அதிகமாக இருந்ததால், வசந்தா தலைப்பகுதியை மூடியபடி, வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருந்தது. அப்போது, முகமூடி அணிந்த ஐந்து பேர், இரு சக்கர வாகனத்தில், விஜயகுமார் வீட்டருகே வந்தனர்.

அப்போது, தலையை குனிந்து வாசலில் கோலமிடுவதில் கவனம் செலுத்திய வசந்தாவின் வாயை பொத்தி, கத்தியை காட்டி மிரட்டி, அவர் கழுத்தில் இருந்த செயினை பறித்தனர்.

மிரட்டல்


'சத்தம் போட முயன்றால் கழுத்தை அறுத்துவிடுவோம்' என, சைகை காட்டி மிரட்டியுள்ளனர். உயிர் பயத்தில், அவர் செய்வதறியாது தவித்துள்ளார். அப்போது, கொள்ளையர்கள் வசந்தாவை கத்தி முனையில் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். இதை கண்டதும் விஜயகுமார், அவரின் தாய் மற்றும் இரு மகள்களும் பதறினர்.

வசந்தாவை விட்டுவிடுமாறு கொள்ளையர்களிடம் கெஞ்சினர். ஆனால், கொள்ளையர்கள் எல்லாரையும் மிரட்ட துவங்கினர். கொள்ளையர்களின் பிடியில் இருந்த மனைவியை காப்பாற்றும் முயற்சியில், விஜயகுமார் அவர்களுடன் போராடினார்.

ஆனால், கொள்ளையர்கள், வசந்தா, விஜயகுமார் உள்ளிட்ட ஆறு பேரையும், அடுத்தடுத்து கயிற்றால் கட்டினர். சத்தம் போடாமல் இருக்க, 'பிளாஸ்திரி'யால், அவர்களின் வாயை ஒட்டினர்.

'பீரோ சாவி எங்கு உள்ளது. பணத்தை எங்கு பதுக்கி வைத்து இருக்கிறீர்கள். சொல்லி விடுங்கள். இல்லையென்றால், உங்கள் எல்லோரையும் கொன்று விடுவோம்' என, மிரட்டியுள்ளனர்.

விஜயகுமாரின் படுக்கை அறை உள்ளிட்ட இடங்களிலும், பீரோ சாவியை தேடினர். கொலை வெறியுடன் இருந்த கொள்ளையர்களிடம் இருந்து உயிர் பிழைத்தால் போதும் என, பீரோ சாவி இருக்கும் இடத்தை விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பீரோவில் இருந்த, 50 லட்சம் ரூபாய், 35 சவரன் நகையை கொள்ளையடித்து, மின்னல் வேகத்தில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

அதிகாலை 5:30 மணிக்கு வந்த கொள்ளைக்கும்பல், 7:00 மணிக்கு தான் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிவிட்டு தப்பியுள்ளது.

வீட்டில் வேலை செய்வதற்காக இரண்டு பேர், காலை 7:30 மணிக்கு விஜயகுமார் வீட்டிற்கு சென்றனர். 'காலிங் பெல்' அடித்தும், யாரும் கதவை திறக்கவில்லை.

கைவரிசை


சந்தேகமடைந்த அவர்கள், வீட்டின் பின்புற பகுதியில் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்றபோது, அனைவரும் ஆங்காங்கே கயிற்றால் கட்டப்பட்டு கிடந்தனர். பின், கொள்ளை சம்பவம் குறித்து, அவசர போலீஸ் எண்:100 வாயிலாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

புழல் காவல் நிலைய போலீசார், கொள்ளை நடந்த வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். பெரிய பங்களா வீடாக இருந்தாலும், 'சிசிடிவி' வசதி செய்யப்படவில்லை.

இதனால், வீட்டின் அருகே சாலையோரம் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்கள் ஐந்து பேரையும், தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திகிலடைந்த நிலையில் இருந்த வசந்தா, கொள்ளை சம்பவம் குறித்து, போலீசாரிடம் பதை பதைப்புடன் விளக்கினார். பயத்தின் பிடியில் இருந்து அவரை விடுவிக்க, போலீசார் படாதபாடுபட்டனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: வீட்டின் கதவை திறந்து வைத்து, வசந்தா தினமும் வாசலில் கோலமிடுவதை கொள்ளையர்கள் நோட்டமிட்டுள்ளனர்.

வீடு பெரும் பங்களாவாக இருப்பதால், நிறைய பணம், நகை இருக்கும் என திட்டமிட்டு, கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.

வீட்டில் வேலை செய்து விட்டு நின்றவர்கள் அல்லது வீட்டைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் உதவியுடன், கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். 'சிசிடிவி' காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறோம். விரைவில் கொள்ளையர்கள் சிக்குவர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us