/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளிர் கல்லுாரி 'வாஸ்போ' போட்டி எஸ்.ஆர்.எம்., ஒட்டுமொத்த 'சாம்பியன்'
/
மகளிர் கல்லுாரி 'வாஸ்போ' போட்டி எஸ்.ஆர்.எம்., ஒட்டுமொத்த 'சாம்பியன்'
மகளிர் கல்லுாரி 'வாஸ்போ' போட்டி எஸ்.ஆர்.எம்., ஒட்டுமொத்த 'சாம்பியன்'
மகளிர் கல்லுாரி 'வாஸ்போ' போட்டி எஸ்.ஆர்.எம்., ஒட்டுமொத்த 'சாம்பியன்'
ADDED : பிப் 16, 2024 12:18 AM

சென்னை, எம்.ஓ.பி., வைஷ்ணவ கல்லுாரி சார்பில், 'வாஸ்போ' என்ற தலைப்பில், மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், அரும்பாக்கத்தில் இரு நாட்கள் நடந்தன.
இதில், பேட்மின்டன் 23, பால் பேட்மின்டன் 13, கூடைப்பந்து 12, சதுரங்கம் 25, டேபிள் டென்னிஸ் 12 மற்றும் வாலிபாலில் 15 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
பேட்மின்டன் போட்டியில், எஸ்.ஆர்.எம்., முதலிடத்தையும், லயோலா, ஸ்டெல்லா மேரிஸ், செயின்ட்ஸ் ஜோசப், அடுத்தடுத்த இடங்களையும் வென்றன. பால் பேட்மின்டனில், எஸ்.ஆர்.எம்., முதலிடத்தையும், செயின்ட் ஜோசப் இரண்டாமிடத்தையும், எத்திராஜ் மற்றும் ஜெபாஸ் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.
கூடைப்பந்தில், இந்துஸ்தான், வேல்ஸ், எஸ்.ஆர்.எம்., - செயின்ட் ஜோசப் அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை வென்றன.
செஸ் போட்டியில், செயின்ட் ஜோசப் முதலிடத்தையும், எஸ்.எஸ்.என்., - எத்திராஜ் அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றின.
டேபிள் டென்னிஸில், எஸ்.எஸ்.என்., - ஸ்டெல்லா மேரிஸ், எத்திராஜ், கிரசண்ட் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை வென்றன. வாலிபாலில், எஸ்.ஆர்.எம்., முதலிடத்தையும், வேல்ஸ் இரண்டாமிடத்தையும், பனிமலர் மற்றும் நாசரத் அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடங்களை வென்றன.
அனைத்து போட்டிகள் முடிவில், எஸ்.ஆர்.எம்., அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று, 'வாஸ்போ' கோப்பையை வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, எஸ்.டி.ஏ.டி.,யின் பொது மேலாளர் சுஜாதா, சர்வதேச கூடைப்பந்து வீராங்கனை சத்யா, எம்.ஓ.பி., கல்லுாரியின் முதல்வர் அர்ச்சனா பிரசாத் ஆகியார் பரிசுகளை வழங்கினர்.