/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளிர் கிரிக்கெட்: கிரீன் இன்வேடர்ஸ் அணி வெற்றி
/
மகளிர் கிரிக்கெட்: கிரீன் இன்வேடர்ஸ் அணி வெற்றி
ADDED : ஆக 16, 2025 12:18 AM

சென்னை, சென்னையில் நடந்து வரும் பிரேயர் மகளிர் கிரிக்கெட் போட்டியில், கிரீன் இன்வேடர்ஸ் அணி, ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பிரேயர் கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது.
அந்த வகையில், சென்னை, வண்டலுார் அடுத்த புதுப்பாக்கம் வி.பி.நெஸ்ட் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்த போட்டியில், கிரீன் இன்வேடர்ஸ் அணி, ப்ளூ அவெஞ்சர்ஸ் அணியை எதிர்த்து மோதியது.
'டாஸ்' வென்ற கிரீன் இன்வேடர்ஸ் அணியின் அனுராகினி - 38, மோனிஷா - 21 ரன்கள் அடித்து, நல்ல துவக்கம் தந்தனர்.
அடுத்தடுத்து வந்த வீராங்கனையர், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில், கிரீன் இன்வேடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 34 ஓவரில் எட்டு விக்கெட் இழந்து 118 ரன் அடித்தது.
அடுத்து களமிறங்கிய ப்ளூ அவெஞ்சர்ஸ் அணியில், வீராங்கனை ஜெனிதா 46 ரன்கள் குவித்து, அணிக்கு கைகொடுத்தார்.
ஆனாலும், 33.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 113 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கிரீன் இன்வேடர்ஸ் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.

