/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குவியும் மகளிர் தொகை மனுக்கள்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குவியும் மகளிர் தொகை மனுக்கள்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குவியும் மகளிர் தொகை மனுக்கள்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குவியும் மகளிர் தொகை மனுக்கள்
UPDATED : ஜூலை 31, 2025 02:44 PM
ADDED : ஜூலை 31, 2025 12:29 AM
ஜாபர்கான்பேட்டை, ஜாபர்கான்பேட்டையில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், பெறப்பட்ட 1,500 மனுக்களில் 1,300 மனுக்கள், மகளிர் உரிமை தொகைக்காக அளிக்கப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் மண்டலம் 139வது வார்டு ஜாபர்கான்பேட்டை வடிவேல்புரத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது.
பல துறை சேவைகள் ஒரே இடத்தில் கிடைப்பதால், ஒவ்வொரு முகாமிலும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் கூட்டம் அலைமோதுவதால், இங்கு 25 கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 1,500 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1,300 மனுக்கள், மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதேபோல் வளசரவாக்கம் மண்டலம் 150வது வார்டு காரம்பாக்கத்தில் நடந்த முகாமில் பெறப்பட்ட 3,246 மனுக்களில் 1,893 மனுக்கள், மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பிக்கப்பட்டவை.