ADDED : செப் 30, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரத்தில் ஓர் அழகு நிலையம் உள்ளது. இங்கு, பாலியல் தொழில் நடப்பதாக, சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று, போலீசார் நிலையத்தில் புகுந்து நடத்திய விசாரணையில், பாலியல் தொழில் நடப்பது தெரிந்தது. இது தொடர்பாக எண்ணுாரைச் சேர்ந்த பிரமிளா, 45, என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அங்கிருந்த இரண்டு பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.