sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சுகாதார அதிகாரிகள் இல்லாததால் 2 மண்டலங்களில் பணிகள் பாதிப்பு

/

 சுகாதார அதிகாரிகள் இல்லாததால் 2 மண்டலங்களில் பணிகள் பாதிப்பு

 சுகாதார அதிகாரிகள் இல்லாததால் 2 மண்டலங்களில் பணிகள் பாதிப்பு

 சுகாதார அதிகாரிகள் இல்லாததால் 2 மண்டலங்களில் பணிகள் பாதிப்பு


ADDED : ஜன 28, 2026 06:15 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார்,:பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லுார் மண்டலங்களில், ஆறு மாதங்களாக மண்டல சுகாதார அதிகாரிகள் பணியிடம் காலியாக உள்ளதால், சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சோழிங்கநல்லுார், பெருங்குடி மண்டலங்களில், 20 வார்டுகள் உள்ளன. விரிவாக்கப் பகுதியானதால், வீடு, நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதேபோல், சென்னையில் அதிக ஏரி, குளங்கள் கொண்ட மண்டலங்களாக இவை உள்ளன. இதனால், இதர மண்டலங்களை விட, இங்கு சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

ஆனால், இரு மண்டலங்களிலும், மண்டல சுகாதார அதிகாரிகள் பணியிடம் ஆறு மாதங்களாக காலியாக உள்ளது. இதனால், கொசு ஒழிப்பு, பிறப்பு - இறப்பு பதிவு, உரிமம் வழங்குவது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இரண்டு மண்டலங்களுக்கும் ஒரு பொறுப்பு அதிகாரி உள்ளார். அவர், ஏற்கனவே அடையாறு மண்டலம் மற்றும் ஐந்து மண்டலங்கள் கொண்ட வட்டார சுகாதார அதிகாரியாகவும் உள்ளார். நான்கு பேர் செய்ய வேண்டிய பணியை, ஒரு அதிகாரி செய்வதால், இரு மண்டலங்களிலும் முழு கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்.

தட்ப வெப்ப நிலை மாற்றத்தால், கொசு தொல்லை, நோய் பாதிப்பு அதிகரித்துள்ளன. மக்களின் இயல்பான வாழ்க்கையில் சுகாதாரம் முக்கிய பங்காற்றுவதால், இரண்டு மண்டலங்களிலும் சுகாதார அதிகாரி நியமிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us