/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உரம் தயாரிக்கும் மையத்தில் மீண்டும் பணிகள் துவக்கம்
/
உரம் தயாரிக்கும் மையத்தில் மீண்டும் பணிகள் துவக்கம்
உரம் தயாரிக்கும் மையத்தில் மீண்டும் பணிகள் துவக்கம்
உரம் தயாரிக்கும் மையத்தில் மீண்டும் பணிகள் துவக்கம்
ADDED : பிப் 24, 2024 12:03 AM

கோடம்பாக்கம், நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, மூடியே கிடந்த இயற்கை உரம் தயாரிக்கும் மையம் திறக்கப்பட்டு, ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், கோடம்பாக்கம், பூலியூர் பிரதான சாலையில், சென்னை மாநகராட்சியின் இயற்கை உரம் தயாரிக்கும் இடம் உள்ளது.
இங்கு, 112வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் சேகரமாகும், 'டன்' கணக்கிலான மக்கும் குப்பை கொண்டு வரப்படுகிறது. இதை, திறந்தவெளியில் பதப்படுத்தி, உரம் தயாரிக்கும் பணி நடந்தது.
இதற்காக, பகிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில், தனியாக இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இங்கு குப்பை மட்டுமே குவிக்கப்பட்டு, இம்மையம் பயன்பாடின்றி மூடி வைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, உரம் தயாரிக்கும் மையம் திறக்கப்பட்டு, மீண்டும் ஊழியர்கள் உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.